ஆலயத்துக்குள்
பிரேவிசிக்கும் பொழுது நம் கண் முன்னால் தெரியும் கொடிமரம்
கொடிமரம் என்றால்? என்றாள் எண் நன்பனின் மனைவி
கொடி ஏற்றுவதற்கு உள்ளது கொடிமரம் என்றான் நண்பன்
சுதந்திர தினவிழா கொண்டாடவா? என்று கிண்டலடித்தாள் அவன் மனைவி
கொடி எற்றத்தான் கொடிமரம். ஆனால் சுதந்திர தின் விழா கொண்டாடல்ல. ஆலய கொடி மரத்துக்கும் மிகப்பெரிய தத்துவங்கள் உள்ளன.
தமிழ்நாட்டில் ஆலயங்களில் கொடி மரம் வைத்திருந்த பழக்கம் ரொம்ம காலமாகவே வழக்கத்தில் இருந்திருக்கிறது. கோவிலில் திருவிழா தொடங்கும்
சமயத்தில் கொடி ஏற்றம் நடந்ததாக தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப் பட்டிருக்கின்றன. அது
துவஜஸ்தம்பம் என்று அழைக்கப் படுகிறது.
விழாக்கள் கொண்டாடும் கோயில்களில்தான் துவஜஸதம்பம் இருக்கும். நம் உடம்பில் உள்ள முதுகெலும்பு போன்றது கொடி மரம்
என்று ஆகமங்கள் சொல்கின்றன. நம் முதுகுத் தண்டுவடத்தில் 32 எலும்பு வளையங்கள் உள்ளன.
அது போலவே 32 வளையங்களுடன் கோவில் கொடி மரம் அமைக்கப்படுகிறது.
முது எலும்புக்கும் இதறகும் என்ன சம்பந்தம்?
எனறான் நண்பன்
கொஞ்சம் விபரமாக
சொல் வேண்டும் இங்க உட்காரலாம். வேதகாலத்தில் கோவில்கள் எல்லாம் இருந்ததில்லை.
இயற்கையின் சூழ்நிலைகளே வழிபாடும் இடமாக
இருந்தன. நாளடைவில் ஆகமங்களை அனுசரித்து ஆலயங்கள் கட்டப்பட்டன. மானுட உடல் ஆலயங்களுள்
மிகச் சிறந்தது என ஆன்றோர்கள் கருதினர். மனித உடலிலேயே தெய்வம் என்ற கருத்து எல்லோருக்கும்
புரியாது.
அவர்களுக்குப் புரிவதற்காகவே ஆலயங்கள் கட்டப்பெற்றன.. ஆகம சாஸ்த்திரம் சொல்லியபடியே ஆலயங்கள் கட்டவேண்டும் .
உயிர் உடம்பில்
அடைபட்டிருப்பது போல் ஆலயத்துள் இறைவன் தங்குகின்றான் என்பதை திருமூலர் தம் திருமந்திரத்தில்,
உடம்பினை முன்னம் இழுக்கென்றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்பினுள்ளே உத்தமன் கோயில் கொண்டானென்று
உடம்பினை யானிருந்து ஓம்புகின்றேனே
பாடியுள்ளார்.
அப்படின்னா?
உடம்பை இழுக்கென்றிருந்தேன்
முன்பு. பின்னால் உடம்பினுக்குள்ளே இறைவன்
என்ற பிரபஞ்ச சக்தி கண்டேன் உடம்பிலே உத்தமன் கோயில் கொண்டானென்று நான் உடம்பினை பேன
ஆரம்பித்தேன் என்பதுதான் அவர் பாடல் பொருள்
சுத்த
வடிவஞ் சுகவடிவாம் ஓம்கார
நித்த
வடிவு நிறைந்தோங்கி சித்தனுமோர்
ஞானவடிவுமிங்கே
நான் பெற்றேன் எங்கெங்கும்
தான்
வினை பாட்டியற்றத்தான் சுத்த உடல். என்பது வள்ளார் வாக்கு.
என்னுடைய
உடலே ஒரு பெரும் கோயில். அதில் இறைவனை எழுந்தருளி வைத்தேன்
நெஞ்சமே கோயில் நினைவே சுகந்தம்
அன்பே
மஞ்சன நீர் பூசை கொள்ள வாராய்
பராபரமே - இப்படி சொன்னவர் தாயுமானவர்
தாயுமானவர் பற்றி
கேள்வி பட்டிருக்கிறேன்.அவரப்பற்றை சொல்லமுடியுமா?
அது அப்புறம். முதலில் சொன்ன
விஷயத்திற்கு வருவோம்.
மனிதன் மேற்கே தலை வைத்து கிழக்கே
கால் நீட்டி மல்லாந்து படுத்திருப்பது போல் ஆலயங்களில் கருவறை முதல் முன் கோபுரம் வரையுள்ள
பாகம் அமைந்திருக்கும். முகம் ஆலயத்தின் கர்ப்பக்கிரகம், அர்த்தமண்டபம் கழுத்து, துவார
பாலகர் நிற்குமிடங்கள் மனிதனது தோள்கள், அங்கிருந்து கொடிமரம் வரையுள்ள பாகம் உடம்பு.
கொடி மரம் முதுகுத் தண்டு, வாயிற் கோபுரம் பாதங்கள் ஆகும்.
மனித உடம்பில் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணி பூரகம், அனாகதம்,
விசுக்தி, ஆக்ஞை எனப்படும் ஆறு ஆதார சக்ரங்களும் இடை, பிங்கலை, சுழிமுனை என்ற மூன்று
நாடிகளும் அமைந்துள்ளன. மனிதனின் மூலாதாரமே
கொடி மரமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.
இடை, பிங்கலை வழியாக செல்லும்
பிராண வாயுவை, சுழிமுனை எனும் நடு நாடியில் நிறுத்தி இறைவனை தியானிக்க வேண்டும் என்பார்கள்.
இதனால் மனம் ஒரு நிலைப்படும்.
இறைவன் வெளிப்படுவான். இந்த அடிப்படையில் தான் கொடி மரம் அமைக்கப்படுகிறது. கொடி மரம்
ராஜகோபுரத்தை விட அதிக உயரமாக இருக்காது. அதே சமயத்தில் கருவறை விமானத்துக்கு நிகரான
உயரத்துடன் இருக்கும். அது போல கருவறையில் இருந்தும், ராஜகோபுரத்தில் இருந்தும் எவ்வளவு
தூரத்தில், எவ்வளவு உயரத்தில் கொடி மரம் அமைக்க வேண்டும் என்பதற்கெல்லாம் விதி முறைகள்
உள்ளன. இப்போ பார்க்கிறோமே இந்த கொடிமரம்
![]() |
துவஜஸ்தம்பம் |
![]() |
புதிய துவஜஸ்தம்பம் |
இப்பொழுது தான் புதிதாக வைக்கபட்டிருக்கிறது.
முன்னால் இருந்தது சுமார் 150 வருடங்களுக்கு முன்னால் வைக்கப்பட்டதாகும். அநேகமாக தேக்கு மரமாக இருக்கும். சந்தனம், செண்பகம், வில்வம், மகிழம் முதலிய மரங்களில்
கொடிமரம் செய்வது உத்தமம் ஆகும். பலா, மா ஆகிய மரங்களில் கொடிமரம் அமைப்பது குறைந்த
நன்மையைத் தருவதால் மத்திமம் ஆகும். மேலே செப்பு,
பித்தளை வைத்து அமைப்பார்கள். தங்க கவசமும் உண்டு. இதனால் வெயில், மழை போன்ற இயற்கை
மாற்றங்களிலிருந்து கொடி மரம் காக்கப்படுகிறது. ஒரே நீளத்தில் ( no joints) இருக்கும்
கல் கொடிமரமும் உண்டு
No comments:
Post a Comment