1
நல்லூர், ஒர் அறிமுகம்
சோழ மண்டலத்தில் சைவம் தழைக்க சோழர்கள் கட்டி கொடுத்த
கோயில்கள் அநேகம். ஆயிரமாயிரம் வருடங்களையும் தாண்டி நிற்கும் அந்த கோயில்கள் நம் முன்னோர்கள்
நமக்கு வைத்து விட்டு போன சொத்துக்கள். அவைகளில் ஒன்றுதான் திருநல்லூரில் இருக்கும்
ஸ்ரீகல்யாண சுந்தரேஸ்வரர் ஆலயம்.
ஓரு ஊர் என்றால் அதில் முக்கியாமானதாக கருதப்படுவது
அந்த ஊரின் சிறப்பு, அங்கு குடியிருக்கும் இறைவன், அங்கு ஓடும் நதி அல்லது தடாகம்.
சில இடங்களில் இறைவன் பெரிதாகப் போற்றப்படும். சில இடங்களில் இயற்கையாகவே நல்ல நதிகள்
ஓட்டத்தினால் வளமாக இருக்கும். மலை வாசஸ்தலமானால் சுற்று சூழ்நிலை குளுமையாக இருக்கும்.
ஆனால் மூன்றினாலும் சிறப்புடைய இடங்கள் மிகக்குறைவு. மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம், என்று மூன்றாலும்
சிறப்புடையது திருநல்லூராகும்.
மூர்த்திதலந் தீர்த்த முறையாய்த் தொடங்கினர்க்கு ஓர்
வார்த்தைசொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே
என்று மூன்றையும் உயர்த்தி சொல்கிறார் தாயுமான ஸ்வாமிகள்.
வடபாற்கயிலையும் தென்பால் நல்லூரும் தம் வாழ்பதியே
என்பது அப்பரடிகள் வாக்கு. நல்லூரை சிறப்பித்து கைலைக்கு சமம் என்பதிலிருந்தே நல்லூரின் பெருமையை அறியலாம்
பல நூற்றாண்டுகளுக்ககும் முன்னால் நல்லூர் எப்படியிருந் திருக்கும்? இதோ சம்பந்தர் காட்டும் காட்சி
பொய்கை சூழ் நல்லூர் ‘நாறும் மல்ர்ப்பொய்கை நல்லூர், குளிர்ந்த சோலையும்
வயலும் சூழ்ந்த திருநல்லூர், திண்ணமரும் பைம்பொழிலும் வயலும் சூழ்ந்த திருநல்லூர், நீரும் வயலும் சூழ்ந்த திருநல்லூரரில் வேத ஒலி சிறக்கும்
கோயிலை இருப்பிடமாகக் கொண்டு தண்புனலும் வயலும்
சூழ்ந்த திரு நல்லூர், மறைநவின்ற கோயிலே கோயிலாக, தேன் சொறியும் சோலைகளில் வண்டுபாடும்
திருநல்லூர், தேனமரும் பைம்பொழிலின் வண்டுபாடும் திருநல்லூர், தேரோடும் நெடுவீதிகளில்
கொடிகள் ஆடும் திருநல்லூர், தேர்மருவு நெடுவீதிக் கொடிகளாடும் திருநல்லூர், நல்லோர்களாகிய
அந்தணர்கள் நித்தம் புகழ்பாடும் நல்லூர், நல்லார்கள் அந்தணர்கள் நாளுமேத்தும் திருநல்லூர்,
கற்றோராகிய வேதவித்தகர்கள் போற்றிவழிபட்ட திருநல்லூர், தாமரைகள் மலரும் வயல் சூழ்ந்த நல்லூர் சடைமீது கொன்றை
கங்கை இவை திகழும் இறைவனது இடம், சடைமீது கொன்றைபுனல் நின்றுதிகழும் நிமலனிடமாம் சேடுலவு
தாமரைகள் நீடுவயலார் திருநல்லூரே, மாசற்ற
அந்தணர்கள் பாடிப்பரவும் நல்லுர், கோயில் தீதமரா அந்தணர்கள் பரவியேத்தும் திருநல்லூர், மாதமரும் கோயிலே, மாசற்ற அந்தணர்கள் வேள்வி
வளர்க்கும் திருநல்லூர், தீதிலா அந்தணர்கள்
தீமூன்றோம்பும் திருநல்லூர் என அவர் பாடல்களிலிருந்து
அறிகிறோம்
இந்த தலத்திற்கு அருமை நண்பருடன் சென்றிருந்தோம். அந்த நண்பர் நமது கோயில்களைப்பற்றி சிறிய அளவிலேயே அறிந்திருந்தார். அவருடன் நடத்திய சம்பாஷணைகளே வரும் பக்கங்களில் காணாலாம்
நாளை நாம் நல்லுர் சென்று வருகிறோம் என்று நண்பரிடம் சொன்னோம்
நல்லூரா எங்கு இருக்கிறது? அங்கு என்ன இருக்கிறது. ?
No comments:
Post a Comment