F பஞ்சவர்ணேஸ்வரரின் பஞ்சாமிர்தம்: December 2012

பார்வதியுடன் கல்யாணசுந்தரர்

பார்வதியுடன் கல்யாணசுந்தரர்

Saturday, 29 December 2012

முகப்பு


“எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே” என்றான் மீசைக்கார கவிஞன்.  என்னதான் தாய்நாடு என்ற பற்றும் பாசமும் இருந்தாலும் சொத்து பத்து என்றால் தந்தையின் ஞாபகம் தான் எல்லோருக்கும் வரும். அதை பராமரிக்க வேண்டும் என்ற எண்ணமும் பிறக்கும். எனவேதான் பாரதி 'சக்தி' என்ற சொல்லை எடுத்தாள்கிறான்.

நல்லூர் என்ற சொல்லைக் கேட்டாலே எங்கள் மூச்சுனிலும் ஒரு சக்தி பிறக்கிறது இருக்காதா பின்னே? அது எங்கள் தந்தையாரின் ஊராயிற்றே!

பெயருக்கேற்ப நல்ல ஊர் எங்கள் நல்லூர். வேதம் தழைத்த ஊர் நல்லூர். ஸ்ரீ கல்யாணசுந்தரேஸ்வரர் கிரிஸுந்தரி அம்மையுடன் ஆளும் ஊர் நல்லூர். அப்பராலும் ஆவுடைப்பிள்ளையாலும் அருணகிரியாலும் பாடல் பெற்ற ஊர் நல்லூர்.


இக்கோயிலைப் பற்றியும், மேலும் பல அறிய தகவல்களை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள விழைகிறோம். இக்கோயிலை மையமாக வைத்து அதன் அருமை பெருமைகளை பார்க்கும் போதே இதர சில பல சிவன் கோவில்களையும் குறிப்பிட்டு ஒப்பு நோக்கவும் இருக்கிறோம்.